International
இந்தியா

ஜாதி மதம் இல்லை! முதன்முறையாக சான்றிதழ் பெற்ற பெண்மணி!

இந்தியாவில் முதல் முறையாக, ஜாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் பெற்று, திருப்பத்துார் பெண் சாதனை படைத்து உள்ளார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த பார்திபராஜாவின் மனைவி சினேகா தான் எந்த சாதி, மதம் அற்றவர் என்று திருப்பத்தூர் தாசில்தாரிடம் சான்றிதழ் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே சாதி மதம் அற்றவர் என்று அரசு சான்றிதழ் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை சினேகா பெற்றார்.
இதுகுறித்து சினேகா கூறுகையில், தான் முதல் வகுப்பில் இருந்து, கல்லுாரி வரை, ‘ஜாதி, மதம் இல்லாதவள் என்று கூறியே படித்தேன். என் சான்றிதழ்களில், ஜாதி, மதம் குறிப்பிடவில்லை. அதேபோல் என் தங்கைகள் மும்தாஜ், ஜெனிபருக்கும் ஜாதி, மதம் குறிப்பிடவில்லை.
எனக்கும், எனது கணவர் பார்த்திப ராஜாவுக்கும், சடங்கு, தாலியின்றி, கடந்தாண்டு திருமணம் நடந்தது.எனவே, ஜாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்கும்படி, திருப்பத்துார் தாசில்தார் அலுவலகத்தில், பலமுறை மனு கொடுத்திருந்தேன். நீண்ட நாள் புகார்களுக்கு பிறகே எனக்கு இந்த சான்றிதழ் கிடைத்தது.
இந்தநிலையில், இந்தியாவிலேயே சாதி, மதமற்றவர் என அரசு சான்றிதழ் பெற்ற முதல் பெண் என்ற பெருமை சினேகாவுக்கு கிடைத்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!