International
இந்தியா

திமுகவுக்கு சாதகமான ஊடகங்கள் அரங்கேற்றி வரும் சதி..?

தருமபுரி மக்களவைத் தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளுக்கு 19-ந்தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதையொட்டி மறுதேர்தல் நடைபெறும் ஜாலி புதூர், அய்யம்பட்டி, நத்தமேடு உள்ளிட்ட பகுதிகளில் தருமபுரி மக்களவைத் தொகுதி பா.ம.க வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி ஆகியோரை ஆதரித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய மருத்துவர் அன்புமணி ராமதாஸ், நத்தமேடு உள்ளிட்ட வாக்காளர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் மறு வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று திமுக சூழ்ச்சி செய்து உள்ளது.
நத்தமேடு பகுதி மக்கள் 1987-ம் ஆண்டு நடைபெற்ற இட ஒதுக்கீடு போராட்டத்தில் கலந்துகொண்டு பல்வேறு இன்னல்களை அனுபவித்து சிலர் உயிர் தியாகத்தையும் செய்துள்ளனர்.
திமுகவுக்கு சாதகமான ஊடகங்கள் இப்பகுதி மக்களை வன்முறைக்காரர்கள் போல் சித்தரித்து பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளது.
1989-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலை முழுமையாக புறக்கணித்து இப்பகுதி மக்கள் அதற்குப்பின் நடைபெற்று வரும் அனைத்து தேர்தல்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியை ஆதரித்து வருகின்றனர்.
தருமபுரி மக்களவைத் தொகுதி மற்றும் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக் கணிப்புகள் அனைத்தும் கழக கூட்டணிக்கு சாதகமாக வருகிறது என்பதை கருத்தில் கொண்டு திமுக மறுவாக்குப்பதிவு நடத்த சூழ்ச்சி செய்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி எப்போதும் நாகரீகமான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்கிறது. அமைதியை முன் நிறுத்தினால் தான் வளர்ச்சி ஏற்படும் என்பதில் உறுதியாக உள்ளது. நத்தமேடு பகுதி மக்களும் இக்கொள்கைக்கு ஒத்துப் போனவர்கள்.
பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவரான ராமதாஸ் மீது ஸ்டாலின் கொச்சையான மற்றும் ஒருமையிலான விமர்சனங்களை முன் நிறுத்தி வருவது கண்டனத்துக்குரியது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு காவேரியில் வரும் உபரி நீரை கொண்டுவரும் திட்டத்திற்கு அண்மையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இது வரவேற்புக்குரியது’ என்று கூறியுள்ளார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!