International
இந்தியா

திருமணமான 5 நாட்களில் பாத்ரூமில் சடலமாக கிடந்த பெண்!

இந்தியாவில் திருமணமான 5 நாட்களில் பாத்ரூமில் உள்ள ஹீட்டரில் இருந்த மின்சாரம் பாய்ந்து புதுப்பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் செகண்ட்ராபாத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா சர்மா. இவருக்கும் மனிஷா பாண்டே (28) என்ற பெண்ணுக்கும் கடந்த 22ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் வீட்டு பாத்ரூமுக்கு சென்ற மனிஷா தண்ணீரை சூடாக்கும் ஹீட்டரை பக்கெட்டில் வைத்துள்ளார்.
பின்னர் மின்சார சுவிட்சை அணைக்க மறந்துள்ளார், இதையடுத்து தண்ணீர் பக்கெட்டில், வழிந்த நிலையில் ஹீட்டரில் கைவைத்த போது மின்சாரம் அவர் மீது பாய்ந்தது.
இதையடுத்து வலியால் துடித்து பாத்ரூமிலேயே விழுந்து மனிஷா உயிரிழந்துள்ளார்.
மனிஷாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த குடும்பத்தார் பாத்ரூம் கதவை உடைத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் உயிர் பிரிந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
திருமணமான 5 நாட்களில் மனிஷா உயிரிழந்தது அவர் குடும்பத்தாரையும், அவர் வசிக்கும் பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!