International
இந்தியா

நான் பயந்து நடுங்கினேன்.. குசல் மெண்டிஸின் திக் திக் நிமிடங்கள்….

உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது தான் பயந்ததாக இலங்கை வீரர் குசல் மெண்டிஸ் வெளிப்படையாக கூறியுள்ளார்.
உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. இறுதிவரை விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணிக்கு கடும் சவால் கொடுத்தவர் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ்.
போட்டியின் போது இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழந்த நிலையில், மலிங்கா வீசிய பந்தினை ஸ்டோக்ஸ் பறக்கவிட்டார். பந்து நேரடியாக எல்லைக்கோட்டிற்கு அருகில் இருந்த குசல் மெண்டிஸை நோக்கி செல்ல, அவர் கேட்ச் பிடிக்காமல் தவறவிட்டார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மெண்டிஸ், நான் அந்த கேட்ச்சை தவறவிட்டதன் பின்னர் பயந்துவிட்டேன். காரணம் போட்டியின் முடிவு மாறியிருந்தால் அதற்கான பழி என் மீது வந்திருக்கும். ஆனால், நுவான் பிரதீப் போட்டியின் முடிவை சாதகமாக்க உதவியிருந்தார்.
பீல்டிங்கில் இலங்கை அணி எப்பொழுதும் போன்று செயற்படுகிறோம். கடந்த வருடத்தை பார்க்கும் போது, நான் அணியில் சிறந்த களத்தடுப்பு வீரராக இருந்தேன். ஆனால், இவ்வருடம் அதிக பீல்டிங்கை தவறவிட்டுள்ளேன். அதேநேரம், அனைத்து அணிகளும் பீல்டிங்கில் தவறவிடுகின்றன. அதனால், பீல்டிங்கில் தவறவிடுவதை குறித்துக்காட்ட முடியாது என கூறியுள்ளார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!