International
இந்தியா

நீர் தொட்டியில் வீசி சிறுமி படுகொலை!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நான்கரை வயது சிறுமி தரை மட்ட நீர்தேக்க தொட்டியில் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொலையாளி யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோத்தகிரி அருகே உள்ள எம் கைகாட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் சஜிதா தம்பதிகள். இவர்களுக்கு சுபாஷினி (14) ஸ்ரீஹர்ஷினி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் பிரபாகரன் இறந்துவிட்ட நிலையில், சுஜிதா தன் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். மேலும் முத்த மகள் சுபாஷினி கோத்தகிரியிலுள்ள தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் சஜிதாவின் கணவர் அதே பகுதியில் உள்ள, சென்‌னையை சேர்ந்த மனோஜ் என்பவருக்கு சொந்தமான பங்களாவில் காவலாளியாக பணிபுரிந்து வந்த நிலையில், தற்போது அவர் இறந்துவிட்டதால், அந்த வீட்டின் பராமரிப்பு பணிகளை செய்யும் தொழிலாளியாக சஜிதா பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் சஜிதாவிற்கு குடிப்பழக்கும் இருந்ததாக கூறப்படும் நிலையில், நேற்று காலை இரண்டாவது மகளான ஸ்ரீஹர்ஷினியை காணவில்லை என சஜிதா கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் எம் கைகாட்டி பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் தேடி பார்த்துள்ளனர்.
பின்னர் சஜிதா வேலைக்கு செல்லும் பங்களா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேடிக்கொண்டிருக்கும்போது, அந்த பகுதியில் சுமார் 8 அடி உயரமுள்ள தரை மட்ட நீர்தேக்க தொட்டியின் மூடி திறந்து கிடப்பதை பார்த்தனர். மேலும் அதில் பொம்மை ஒன்று மிதந்து கொண்டிருப்பதை கண்ட நிலையில், அந்த பொம்மை காணாமல் போன ஸ்ரீஹர்ஷினியின் பொம்மைதான் என அவரது சகோதரியிடம் விசாரித்ததில் தெரிய வந்தது.  இதனை தொடர்ந்து நன்றாக தேடிய போது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் முழ்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அப்பகுதி மக்கள் உதவியுடன் தொட்டியிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு சிறுமியின் உடல் மீட்டெடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், குடிப்பழக்கம் உடைய சஜிதா தன்னுடைய நான்கரை வயது மகளை கிணற்றில் வீசி கொலை செய்தாரா அல்லது வேறு காரணங்களால் வேறு யாரேனும் கொலை செய்து வீசி சென்றனரா என்ற கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அதிலுள்ள பதிவுகளை வைத்து உண்மையான குற்றவாளி யார் என்று விசாரணை ‌செய்து வருகின்றனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!