International
இந்தியா

மனைவி மீது இருந்த கோபம்… நள்ளிரவு நடந்த சம்பவத்தால் கணவனுக்கு நேர்ந்த விபரீதம் …!!!!

தமிழகத்தில் குடிபோதையில் நள்ளிரவில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட கணவன், கத்தியை எடுத்து குத்த முயன்ற போது, எதிர்பாராதவிதமாக கத்தி அவரின் வயிற்றிற்கு கீழே குத்தியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சென்னை, அயனாவரத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தவர் மனோகரன் (28). இவர் சரிதா(24) என்ற பெண்ணை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்த சில நாட்களிலே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மனோகர் அடிக்கடி மது குடித்துவிட்டு, சரிதாவை அடிப்பதும், துன்புறுத்துவதாகவும் இருந்துள்ளார்.

இதனால் மிகுந்த மன வேதனையடைந்த சரிதா அவ்வப்போது, அருகில் இருக்கும் தன்னுடைய தாயின் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார்.
சம்பவ தினத்தன்று நள்ளிரவு அளவிற்கு அதிகமாக மது அருந்தியிருந்த மனோகர், தயார் வீட்டிற்கு சென்றிருந்த சரிதாவிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் சத்தம் கேட்டதால், அருகில் இருந்த ராகவேந்திரன்(65) என்பவர் இடையில் வந்துள்ளார்.
அப்போது ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற மனோகர் தன் இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து, குத்த முயன்ற போது, எதிர்பார்தவிதமாக கத்தி அவரது அடிவயிற்றிற்கு கீழே வெட்டியதால், அவருக்கு அதிக ரத்தம் வெளியேறியுள்ளது.
இருப்பினும் கத்தியை வெளியே எடுத்து ராகவேந்திரனை அவர் குத்தியுள்ளார். இதையடுத்து இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் அதிக ரத்தம் வெளியேறியதன் காரணமாக மனோகர் உயிரிழந்தார். ராகவேந்திரனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!