International
இந்தியா

மருகளுடன் பேசி வந்த 70 வயது மாமனார்! விபரீத சம்பவத்தின் பின்னணி

தமிழகத்தில் 70 வயது முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஏசுராஜன் (70). இவருக்கு கலா என்ற மனைவியும், அருள்ராஜ் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
ஏசுராஜ் அத்திப்பட்டி பகுதி ஒன்றில் சொந்தமாக கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு அருள்ராஜிக்கும் அல்போன்ஸ் ரூபி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் ஏசுராஜனுக்கும், கலாவுக்கு கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவருக்கு சாப்பாடு மகன் ஏசுராஜ் வீட்டில் இருந்து தான் வரும். இதனால் ஏசுராஜன், மருமகள் அல்போன்ஸ் ரூபியுடன் சகஜமாகப் பேசிவந்துள்ளார்.
இது குடும்பத்தினருக்குப் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் கணவர் ஏசுராஜன் குறித்து கலா, தன்னுடைய தூரத்து உறவினர் கோபால் மற்றும் மகள், மருமகனிடம் கூறியுள்ளார்.
கோபால் கலாவுக்கு தம்பி முறை என்ற் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 20-ஆம் திகதி இரவு ஏசுராஜனிடம் கோபால் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறின் காரணமாக ஆத்திரமடைந்த கோபால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஏசுராஜனை கத்தியால் குத்தியுள்ளார்.
இரத்த வழிந்த நிலையில் உயிருக்கு போராடிய அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், ஏசுராஜனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது, மருமகளுடன் ஏசுராஜன் பேசுவது கலாவுக்குப் பிடிக்கவில்லை, இந்த விவகாரம் தொடர்பாகவே கோபால் என்பவர் பஞ்சாயத்து செய்ய வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் தப்பியோடி கோபாலை பிடித்தால் மட்டுமே இந்த சம்பவத்திற்கான உண்மை காரணம் தெரியவரும் என்று பொலிசார் கூறியுள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!