International
இந்தியா

மற்றுமொரு அதிக சக்தி கொண்ட இரண்டாவது இயந்திரம் நடுகாட்டுப்பட்டிக்கு சென்றுள்ளது.

குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் தீவிரமான இடம்பெற்று வருகின்ற நிலையில், மற்றுமொரு அதிக சக்தி கொண்ட இரண்டாவது இயந்திரம் நடுகாட்டுப்பட்டிக்கு சென்றுள்ளது.
ஆழ்துளைக் கிணறுக்கு அருகில் 2 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலம், 110 அடி ஆழத்தில் இந்தக் குழி தோண்டப்பட்டு வருகிறது.
ரிக் இயந்திரம் மூலம் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் 100 அடி குழியை தோண்ட முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோண்டும் இடத்தில் பாறைகள் இருப்பதால் குழித் தோண்டும் பணி தாமதமானது. இதனைத் தொடர்ந்து இராமநாதபுரத்திலிருந்து அதிக திறன் கொண்ட மற்றொரு இயந்திரத்தை நடுகாட்டுப்பட்டிக்கு கொண்டுசெல்ல மீட்புப் படையினர் திட்டமிட்டனர்.
இந்நிலையில் இராமநாதபுரத்தில் இருந்து இரண்டாவது இயந்திரம் தற்போது நடுகாட்டுப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் துளையிடும் பணி தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டாவது இயந்திரம் முதல் இயந்திரத்தைவிட மூன்று மடங்கு அதிக திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியில் தாமதம் – மீட்புப்பணி நடைபெறும் இடத்தில் மழை!குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி நடைபெறும் இடத்தில் மழை பெய்து வருகிறது.
குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியில் தாமதம் – ரிக் இயந்திரத்தின் உதிரி பாகங்கள் உடைவதால் சிக்கல்!ஆழ்துளை கிணறு அருகே குழி தோண்டும் ரிக் இயந்திரத்தின் உதிரி பாகங்கள் உடைவதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், இராமநாதபுரத்தில் இருந்து கொண்டுவரப்படும் ரிக் இயந்திரம் இன்னும் ஒரு மணி நேரத்தில் நடுக்காட்டுப்பட்டியை வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது.
புதிதாக கொண்டுவரப்படும் ரிக் இயந்திரம், பாறைகளை குடைந்து எளிதில் பள்ளம் தோண்டும் திறன் உள்ளதாக கூறப்படுகிறது.
UPDATE: குழந்தை சுர்ஜித் உயிரோடு இருப்பதை உறுதிப்படுத்துவதில் சிக்கல்!இந்தநிலையில் சுர்ஜித் மீட்பு பணிகள் எந்தளவுக்கு நடைபெற்று வருகிறது என்பது குறித்து அமைச்சர் விஜய பாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.
தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி 43 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இந்த மீட்டு பணிகளை அருகே இருந்து கவனித்து வருகிறார் அமைச்சர் விஜய பாஸ்கர். அவரது அர்ப்பணி குறித்து சமூக வலைத்தளங்களில் நேர்மறையான செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று சுர்ஜித் மீட்பு பணி குறித்து விஜய பாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
இதன்போது அவர், ‘சுர்ஜித்தை மீட்க 70 பேர் கொண்ட தேசிய பேரிடர் குழு பணியில் ஈடுபட்டு வருகிறது.
நிலத்தில் அதிர்வுகள் ஏற்படுவதை தடுக்க மிகுந்த கவனத்துடன் குழியை தோண்டி வருகிறோம். இதுவரை 6.3 மீற்றர் தோண்டப்பட்டுள்ளது.
அதாவது ஏறக்குறைய 20 அடி தோண்டியுள்ளனர். தொடர்ந்து ஒக்சிஜன் செலுத்தி வருகிறோம். நேற்று முதல் குழந்தையின் கையில் அசைவு எதுவும் தெரியவில்லை.
ரோபோ கேமிராவை உள்ளே செலுத்தி குழந்தையின் கையிலுள்ள வெப்ப அளவை பதிவு செய்துள்ளோம். கையில் வெப்பநிலை இருப்பதால் குழந்தை மயக்கத்தில் இருக்கலாம்.
மீட்பு பணிகள் எந்தளவுக்கு வேகமாக நடைபெற்று வருகின்றன என்பதை முதல்வர் கேட்டறிந்து வருகிறார்’ என தெரிவித்துள்ளார்.
UPDATE: குழந்தை சுர்ஜித் உயிரோடு இருப்பது உறுதி செய்யப்பட்டது!குழந்தை சுர்ஜித் உயிரோடு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த பகுதியிலுள்ள மருத்துவர்களினால் தொழிநுட்ப உதவியுடன் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.
தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி, 41 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது.
ஆழ்துளை கிணறுக்கு அருகில் 2 மீற்றர் தொலைவில் 1 மீற்றர் அகலம், 110 அடி ஆழத்தில் இந்தக்குழி தோண்டப்பட்டு வருகிறது.
UPDATE: குழிதோண்டும் பணியின் வேகம் குறைந்தது – குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியில் தாமதம்!கடின பாறைகளால் குழிதோண்டும் பணியின் வேகம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.
தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி, 40 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது.
ஆழ்துளை கிணறுக்கு அருகில் 2 மீற்றர் தொலைவில் 1 மீற்றர் அகலம், 110 அடி ஆழத்தில் இந்தக்குழி தோண்டப்பட்டு வருகிறது.
ரிக் இயந்திரம் மூலம் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் 100 அடி குழி தோண்ட முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தோண்டும் இடத்தில் பாறைகள் இருப்பதால் குழி தோண்டும் பணி தாமதமாகியுள்ளது.
இதுவரை 20 அடி ஆழம் மட்டுமே தோண்டப்பட்டுள்ளது. 100 அடிவரை முழுமையாகத் தோண்டுவதற்கு இன்னும் இரண்டு, மூன்று மணி நேரம் ஆகலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
UPDATE: குழிக்குள் இறங்கி குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியில் தாமதம் – குறுக்கிடும் பாறைகளினால் சிக்கல்!100 அடி குழி தோண்ட மண்ணின் தன்மைக்கு ஏற்ப 2 முதல் 3 மணி நேரம் ஆகலாம் என கூறப்படுகின்றது.
தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி 37 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
ஆழ்துளை கிணறுக்கு அருகில் 2 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலம், 110 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டு வருகிறது.
ரிக் இயந்திரம் மூலம் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் 100 அடி குழி தோண்ட முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தோண்டும் இடத்தில் பாறைகள் இருப்பதால் குழி தோண்டும் பணி தாமதமாகியுள்ளது.
எனவே 100 அடி குழி தோண்ட மண்ணின் தன்மைக்கு ஏற்ப 2 முதல் 3 மணி நேரம் ஆகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
குழிக்குள் இறங்கி குழந்தை சுர்ஜித்தை தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் மீட்க நடவடிக்கை!ரிக் இயந்திரம் கொண்டு தோண்டப்படும் குழிக்குள் 3 தீயணைப்பு வீரர்கள் இறங்கி, குழந்தை சுர்ஜித்தை மீட்கவுள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.
தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி 37 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.
அதாவது ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது.
ஆழ்துளை கிணறுக்கு அருகில் 2 மீற்றர் தொலைவில் 1 மீற்றர் அகலம், 110 அடி ஆழத்தில் இந்தக்குழி தோண்டப்படும். குழி தோண்டும் பணிக்காக ரிக் இயந்திரம், மீட்புப் பணி நடைபெறும் இடத்திற்கு வந்தது.
இந்த இயந்திரத்தை ஒருங்கிணைத்து நிலைநிறுத்தும் பணி நடைபெற்றது. அது முடிவடைந்த நிலையில் குழி தோண்டும் பணியை இயந்திரம் தொடங்கியுள்ளது. இந்த பணி ஒன்றரை மணி நேரத்தில் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.
பின்னர் கண்ணதாசன், திலீப்குமார், மணிகண்டன் ஆகிய மூன்று தீயணைப்பு வீரர்கள் குழிக்குள் இறங்கவுள்ளனர்.
ஒக்சிஜன் குழாய்களுடன் இறங்கும் இவர்கள், பக்கவாட்டில் குழி தோண்டி, குழந்தை சுர்ஜித்தை மீட்பார்கள். அதற்கானத் தகுந்த ஆலோசனைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!