International
இந்தியா

12 வயது மகள் தந்தையிடம் அனுபவித்த கொடுமை…!!

போதையில் மகளுக்கு வன்புணர்வு தொல்லை கொடுத்த தந்தையை பொலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த கூலித் தொழிலாளி பாண்டியன் என்பவர் தனது 12 வயது மகளுக்கு வன்புணர்வு தொல்லை கொடுத்துவந்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவி எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.
அதில், அவர் தினமும் மது அருந்திவிட்டு வந்து வீட்டில் பிரச்சினை செய்வதாகவும், கடந்த சில நாட்களாக தான் வீட்டில் இல்லாத நேரத்தில் மகளை தவறாக துன்புறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனால் தானும், தனது மகளும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அதனால் தனது கணவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதையடுத்து, கணவர் விசாரணை செய்ததில், மதுபோதையில் தான் தவறு செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து, அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!