International
ஏனைய நாடுகள்

அத்தியாவசிய சேவைகளை கண்காணிக்க அதிகாரம்!

நாட்டில் தற்போது நிலவுகின்ற நிலைமையை கருத்திற் கொண்டு, அத்தியாவசிய சேவைகள் முன்னெடுப்பதை கண்காணிப்பதற்காக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அதிகாரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மாவட்ட மட்டத்தில் சேவைகளை முன்னெடுப்பதற்காக, அதிகாரிகள் குழுவொன்றை நியமிக்குமாறும், உணவு மற்றும் மருந்துப் பொருட்களை சகல வீடுகளுக்கும் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!