International
ஏனைய நாடுகள்

இலங்கையில் கொடூரமான தொடர்குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சல் செலுத்தும் வகையில் கூகுள் நிறுவனம் துக்க தினத்தை அனுஷ்டித்தது!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தொடர்குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த வர்களுக்கு அஞ்சல் செலுத்தும் வகையில் கூகுள் நிறுவனமும் தனது தேடல் பொறியில் கறுப்பு நிறத்திலான பட்டியினை பிரசுரித்து துக்க தினத்தை அனுஷ்டிப்பதற்கு ஆதரவு வழங்கியுள்ளது.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தொடர்குண்டுத்தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உட்பட பல்வேறு இடங்களைச் சேர்ந்த 300 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

இதனை அடைத்து மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்றைய தினத்தை நாடளாவிய துக்க தினமாக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் காலை 8.30 மணி தொடக்கம் அடுத்த 3 நிமிடங்கள் வரையான காலப் பகுதியில் அனைவரையும் மௌன அஞ்சலி செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post Views:
12

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!