Mon. Nov 30th, 2020

ஈரான் ஆதரவுப்பெற்ற ஹவுத்தி போராளிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏமன் தலைநகர் சனாவில் சவுதி தலைமையிலான கூட்டுப்படை சரமாரி வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

சனாவில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதை குடியிருப்பாளர்கள் மற்றும் ஏமன் படைகளின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இராணுவ பொறியியல் முகாம் மற்றும் தேசிய பாதுகாப்பு எந்திரத்தின் தலைமையகம் ஆகியவற்றை குறிவைத்து சவுதி தலைமையிலான கூட்டுப்படை ஒன்பது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது என கூறினர்.

முகாமில் உயர்மட்ட ஹவுத்தி தலைவர்களின் கூட்டத்தை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக ஏமன் படைகளின் செய்தித் தொடர்பாளர் வாடா அல்-டெபீஷ் தெரிவித்தார்.

சனாவில் தாக்குதல் நடத்தப்பட்டதை சவுதி தலைமையிலான கூட்டுப்படை தரப்பிலிருந்து உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

சவூதி தலைநகர் ரியாத்தில் வியாழக்கிழமை ஏவுகணை மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி முக்கியமான இலக்கை குறித்து தாக்கியதாக ஹவுத்தி குழு கூறியதை அடுத்து சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

share

By admin

error: Alert: Content is protected !!