International
ஏனைய நாடுகள்

கஞ்சிப்பானயின் தந்தை உள்ளிட்ட அறுவருக்கு விளக்கமறியல்

நேற்று (12) கைது செய்யப்பட்ட கஞ்சிப்பான இம்ரானின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட ஆறு பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிப்பான இம்ரானிற்கு வழங்குவதற்காக இரண்டு கையடக்க தொலைபேசிகள் மற்றும் இரண்டு மின்னேற்றிகளையும் எடுத்து சென்ற அவரின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட ஆறு பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் கொண்டு சென்ற உணவு பொதியில் இரகசியமாக இந்த பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!