International
ஏனைய நாடுகள்

சட்டவிரோத மண் அகழ்வு: கிண்ணியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பகுதி மக்களினால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மகமாரூ பிரதான வீதியின் ஊடாக கனரக வாகனங்கள் செல்வதை தடை செய்யுமாறும், போராட்டக்காரர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இந்தநிலையில், போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு அமைவாக விசேட கலந்துரையாடலுக்கு ஏற்பாடுகள் செய்து தருவதாகவும், போராட்டக்காரர்கள் சார்ப்பில் 10 பேர் கொண்ட குழு ஒன்றை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்திற்கு வருகை தருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, திருகோணமலை மாவட்ட காவல்துறை அத்தியட்சகர் போராட்டக்காரர்களிடம் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாக கூறினார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!