International
ஏனைய நாடுகள்

சாதனையாளர் கௌரவிப்பும் பரிசளிப்புவிழாவும்-2020

வவுனியா விஞ்ஞானங்குளம் நவரத்தினம் வித்தியாலயத்தின் சாதனையாளர் கௌரவிப்பும் பரிசளிப்புவிழாவும்-2020

பாடசாலை முதல்வர் திரு.தவநாதன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முதன்மை அதிதியாக நெடுங்கேணி கோட்டக்கல்விப்பணிப்பாளரும் சிறப்பு அதிதிகளாக வவுனியா வடக்குப்பிரதேச சபை உறுப்பினர்களான திரு.விநாயகமூர்த்தி.சஞ்சுதன், திரு.ஜெயக்கொடி ஜெயரூபன், திருமதி-வீரசிங்கம் தவராணி மற்றும் சின்னடம்பன் கிராமசேவகர். திரு.சிவகாந்தன், தொழினுட்ப உத்தியோகத்தரும் சமூக செயற்பாட்டாளருமாகிய திரு.மோர்சிபவன், பாடசாலையின் வசதிப்படுத்தனர் திருமதி. ஜெ.சிங்கராசா ஆகியோரும் கௌரவ அதிதிகளாக கனகராயன்குளம் மகாவித்தியாலய முதல்வர் மற்றும் ஆரம்ப பாடசாலை முதல்வர்களும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் சாதனைபெற்ற மாணவன் மற்றும் சித்தியடைந்தவர்களுக்கான மாணவர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர் திருமதி சத்தியேஸ்வரி சோதிராசா அவர்களுக்குமான பரிசுப்பொருட்கள் வழங்கிக்கௌரவிக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வை பாடசாலை அபிவிருத்திச்சங்கம் சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்தி நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்பெற்று சாதனை படைத்த மாணவன் நயன்-159 அவர்களுக்கான வங்கிக்கணக்கும் சமூக செயற்பாட்டாளர் திரு.மோர்சிபவன் அவர்களால் திறந்துவைத்து வழங்கப்பட்டது.

Most Popular

To Top
error: Alert: Content is protected !!