International
ஏனைய நாடுகள்

சிறுப்பிட்டியில் முதியோர்களுக்கு உதவிகள்

செரண்டிப் நிறுவன அனுசரணையில் சிறுப்பிட்டி மேற்கு ஜனசக்தி சனசமூக நிலைய அங்கத்தவர்களுக்கு போர்வைகள், உடுபுடவைகள் மற்றும் நிதியுதவி என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நிலையத்தலைவர் அப்பன் அவர்களின் தலைமையில் நேற்று (19) இடம்பெற்ற இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட முதியோர்களுக்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு உதவிகளை பயனாளிகளிடம் வழங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன், இலங்கைக்கான செரெண்டிப் நிறுவன இணைப்பாளர் அ.கந்தசாமியும் கலந்துகொண்டிருந்தார்

விருந்தினர்களுடன், பயனாளிகள், பொதுமக்கள் ஊரவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Most Popular

To Top
error: Alert: Content is protected !!