International
ஏனைய நாடுகள்

சிறுமி கொலைக்கு யார் காரணம்?? வெளியான கொலையாளியின் இன்னொரு முகம்…

6 வயது பிரித்தானிய சிறுமி அலீஷா மெக்பைல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவளை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 16 வயது சிறுவனின் வெளிவராத இன்னொரு முகம் குறித்த பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

அலீஷா கொலை செய்யப்பட்ட தீவாகிய Bute, குற்றச் செயல்களே நடைபெறாத ஒரு இடம் என்றும், அதனால் வேலையே இல்லை என்பதால் அங்குள்ள நீதிமன்றம் மூடப்பட்டதென்றும் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அப்படிப்பட்ட ஒரு தீவில் வசித்து வந்த, கொடூர கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த சிறுவனின் தாய் அவனைப்பற்றி கூறும் கதையும் வேறு மாதிரி இருக்கிறது.

அவன் நன்றாகப் படிக்கிற ஒரு மாணவன் என்றும், அவன் முரடன் அல்ல, சாதாரண ஒரு சிறுவன் என்றும் கூறும் அவன் தாய், அவ்வப்போது அவன் கஞ்சா புகைப்பதுண்டு, இந்த தீவில் இது சாதரணமான ஒரு பழக்கம் என்கிறார்.

விசாரணையின்போதும் இப்படிப்பட்ட இரக்கமற்ற ஒரு செயலை அவன் செய்திருப்பான் என்பதற்கான அறிகுறி எதுவும் அவனிடம் இல்லை.

அழகானவன், நன்றாக உடுத்தக்கூடியவன், பள்ளியில் எல்லா பெண்களுக்கும் அவன் மீது ஒரு கண் உண்டு.

சொல்லவே வேண்டாம் ஏராளமான பெண் தோழிகள், பள்ளியிலேயே மிக அழகான பெண்ணுடன் டேட்டிங் என மிக பிரபலமானவனாக இருந்திருக்கிறான் அவன். என்றாலும் அவன் குடும்பத்தாருக்கு தெரியாத ஒரு இருண்ட பக்கம் அவனுக்கு இருந்திருக்கிறது.

அவனுக்கு ஆறு அல்லது ஏழு வயது இருக்கும்போது, நீந்த செல்லும்போது ஒரு சிறுமியைப் பிடித்து அவளது தலையை தண்ணீருக்குள் வெகு நேரம் அழுத்தி வைத்திருக்கிறான் அவன்.

அவள் இறந்து விடுவாள் என்ற நிலை வந்த பிறகே அவளை விட்டிருக்கிறான் அவன். வீட்டில் நல்ல பிள்ளை என்று பெயரெடுத்தாலும், உள்ளூரில் மற்றவர்கள் அவன் ஒரு தொல்லை என்றும், கட்டிடங்களுக்கு தீ வைக்க முயலும்போது பிடிபட்டிருக்கிறான் என்றும் தெரிவிக்கிறார்கள்.

சமீபத்தில் அவன் ஒரு பதின்ம வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அவளை ஆபாசமாக படம் எடுத்து அந்த படங்களை தனது நண்பர்களுக்கு காட்டியதாகவும் கூறப்படுகிறது.

அலீஷாவைக் கொலை செய்ததாக அவன் குற்றம் சாட்டியுள்ள அலீஷாவின் தந்தையின் பெண் தோழியுடனும் அவன் அவ்வப்போது பாலுறவு கொண்டதாக அவனே கூறியிருக்கிறான்.

அப்படியானால் இப்படிப்பட்ட இன்னொரு முகம் கொண்ட அவனது சுய கர்வத்தையும், கடவுள் நம்பிக்கை இல்லாத வாழ்க்கையையும் கண்டித்து வளர்க்க இயலாத நிலையில் இருந்த குடிகாரத்தாய் அவனது குற்றச் செயல்களுக்கு காரணமா? அல்லது அருகிலிருந்து நெறிப்படுத்தாமல் வெளிநாட்டில் வேலை செய்யும் அவன் தந்தை காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எப்படியோ இப்போதிருக்கும் நிலையில் அவனுக்கு கஞ்சா விற்பதை நிறுத்தியதற்காக தனது மகளையே கொன்று விட்டானே என தன்னைத்தானே நொந்து கொள்ளும் அலீஷாவின் தந்தை முதல், தன் மகன் அப்பாவி என்று நம்பிக் கொண்டிருந்த அவனது தாய் வரை எல்லோருமே அவனது இன்னொரு பக்கத்தை நன்றாகவே தெரிந்து கொண்டு விட்டார்கள்.


Post Views:
21

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!