International
ஏனைய நாடுகள்

சீனா நாட்டில் 26வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிர் பிழைத்த அதிசய சிறுமி!

சீனா நாட்டில் 26வது மாடியில் இருந்து 6 வயது சிறுமி கீழே விழும் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

சீனாவின் சோங்கிங் என்ற இடத்தில் 33 மாடிகளை கொண்ட குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த குடியிருப்பில் 26வது மாடியில் இருந்த சிறுமி, ஜன்னலை தட்டி கொண்டு இருந்ததாக கூறுகின்றனர்.

எதிர்பாக்காத நேரத்தில் திடீரென ஜன்னலின் கண்ணாடி உடைந்து சிறுமி கீழே விழுந்துள்ளார். தரையில் விழுவதற்கு சில நொடிகளுக்கு முன்பு, அருகில் இருந்த துணியில் சிக்கி விழுந்தார்.

இதனால் எந்தவித காயமும் இன்று உயிர் தப்பினார். அருகில் இருந்தவர்கள் பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருக்க சிறுமியோ எந்தவித பதற்றமும் இன்று அங்கிருந்து சென்றுவிட்டார். தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.


Post Views:
17

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!