International
ஏனைய நாடுகள்

செங்குத்தா பொதுச் சந்தையும் – கோரிக்கை புறக்கணிப்பும்

25.914 மில்லியன் நிதியில் புதிதாக அமைக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்ட யாழ் கல்வியங்காடு செங்குந்தா பொதுச் சந்தையில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வண்ணம் தொடர்ச்சியாக அப்பகுதி மக்கள், வர்த்தகர்கள், சந்தை வியாபாரிகள், சமூக பொது அமைப்புகள் கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர். பல முறை யாழ் மாநகர சபையுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டும் கோரிக்கைகளை நிறைவேற்றாது காலம் தாழ்த்தியதன் காரணமாக வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டங்களில் ஈடுபட்டு தமது எதிர்ப்பினையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

புதிதாக அமைக்கப்பட்ட இந்த செங்குந்தா பொதுச்சந்தை தொடர்பாக மேலும் தெரியவருவது,

25.914 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட இந்தச் சந்தையை (18/12/2019) அன்று யாழ் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் திறந்து வைத்திருந்தார். பொதுச் சந்தையில் பல குறைபாடுகள் இருப்பதாக திறப்பு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். மேலும், அதனை மாநகர சபை தொழில் தொழில்நுட்பவியாளர் பிரிவினர் கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே சிறந்த தொடர்பாடல் இருக்கும் அதனை நிச்சயம் செய்து தருவதாக யாழ் மாநகர சபை முதல்வர் உறுதி மொழி அளித்திருந்தார்.

யாழ் மாநகர சபை முதல்வர் தனது உறுதி மொழிகளை நிறைவேற்றாததை அடுத்து யாழ் மாநகர சபையின் செயற்பாட்டை கண்டித்து (7/1/2020) முழு கடையடைப்பு போராட்ம் முன்னெடுக்கப்பட்டது. அன்று சந்தை வியாபாரிகள், மக்கள், வர்த்தகர்கள் இணைந்து 5ம் வட்டார உறுப்பினர் மதிவதனிக்கு மனு ஒன்றினை கையளித்திருந்தனர். குறித்த பிரச்சினைக்கு தீர்வளிக்கும் முகமாக (8/1/2020) யாழ் மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் சந்தை வியாபாரிகள், வர்த்தகர்கள் வட்டார உறுப்பினர்கள் என்பவர்களுடன் முதல்வர் கலந்துரையாடியிருந்தார்.

அப்போது சுட்டி காட்டப்பட்ட குறைபாடுகளான,

  • சந்தையை சுற்றி பாதுகாப்பு வேலி (Net), நுழைவாயில் அரண் (Gate) அமைத்தல்.
  • மீன் சந்தையை விஸ்தரித்து மரக்கறி சந்தையுடன் இணைத்து பெரிதாக்கல்
  • சந்தைக்குறிய 6 வாசல்களை குறைப்பதோடு (4 ஆக மாற்றல்) பாதுகாப்பு அரண் (Gate) அமைத்தல்
  • மீன் சந்தைக்கு மேலுள்ள மண்டபத்தை பூர்த்தி செய்தல்.
  • பபருத்தித்துறை வீதியிலுள்ள முகப்புவாயிலை பெரிப்பித்தல்.

இவற்றை எவ்வாறு தீர்வளிக்க முடியும் என முதல்வர் கலந்தாலோசித்திருந்தார். அந்த பேச்சு வார்த்தைகளில் எந்தவொரு பயனும் அளிக்கவில்லை, பொதுமக்கள் ஊடகங்கள் வாயிலாகவும், அரசியல் பிரமுகர்கள் தமது கருத்துக்கள் மூலமாகவும் யாழ் மாநகர சபை முதல்வருக்கு அழுத்தங்களை கொடுத்திருந்தனர். தொடர்ச்சியான போராட்டங்களுக்கு மத்தியில் யாழ் மாநகர சபை தனது நிலைப்பாட்டினை மாற்றியமைத்து (28/1/2020) காலை சந்தையில் இருந்த குறைபாடுகளை மாநகர சபை மராமத்து குழு சந்தை வியாபாரிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள்களுடன் பார்வையிட்டனர்.

மராமத்து குழு உறுப்பினர்கள் சந்தை தொடர்பான மக்கள் கோரிக்கைகளை (6/2/2020) நகர சபையில் சபை உறுப்பினர்கள் முன்னிலையில் முன்வைத்தனர். கல்வியங்காடு பொதுச் சந்தை குறைபாடுகளை மீள் புனரமைக்க யாழ் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட்டால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

மீள் புனரமைக்க வருகின்ற நாளை மறுநாள் (18/2/2020) அன்று இது தொடர்பான கணக்கு மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளனஎன யாழ் மாநகர சபை தெரிவித்துள்ளது. இது போன்ற பல கோரிக்கைகளுக்கு இறுதி தீர்மானங்கள் எடுத்திருந்த போதும் அவை அனைத்தும் நிறைவேற்றப்படாததை போல இதுவும் நீரின் மீது எழுதியதை போல அமைந்து விடுமோ என்று மாநகர சபை அங்கத்தவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். (த.ஷா)

Most Popular

To Top
error: Alert: Content is protected !!