International
ஏனைய நாடுகள்

ட்ரம்ப் இந்தமாத இறுதியில் இந்தியாவுக்கு விஜயம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 24ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெள்ளை மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்திய பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்திய விஜயத்தின் போது இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தல், இராணுவ ஆயுதக் கொள்முதல் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஒப்பந்தம் கைசாத்திடப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சுற்றுப் பயணத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் அவரது மனைவி மெலானியா ட்ரம்பும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!