International
ஏனைய நாடுகள்

ட்ரம்ப் மீதான குற்றப் பிரேரணை – செனட் சபையின் விசேட அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் மீதான குற்றப் பிரேரணைகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக செனட் சபை அறிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியினரான குடியரசுக்கட்சியினர் செனட் சபையில் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையிலேயே டொனல்ட் ட்ரம்ப் விடுவிக்கப்பட்டுள்ளார்,

யுக்ரைனுடன் இணைந்து ஜனாதிபதித் தேர்தலில் தமது எதிர் வேட்பாளரான ஜோ பைடனை வீழ்த்த திட்டம் தீட்டியதாகவும் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கான விசாரணைகள் செனட் சபையில் நடத்தப்பட்டு வந்தன,

இதன் போது குறித்த குற்றச்சாட்டுக்களிலிருந்து டொனல்ட் ட்ரம்ப் விடுவிக்க 52 ஆதரவாகவும் 48 பேர் எதிராகவும் வாக்களித்திருந்தனர்.

அத்துடன் ட்ரம்ப் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தாரா என்ற வாக்கெடுப்பில் அவர் அவ்வாறு செய்யவில்’லை என 53 பேர் வாக்களித’ததுடன்’ 47 பேர் எதிராக வாக்களித்தனர்,

குற்றப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலில் டொனல்ட் ட்ரம் போட்டியிடவுள்ளார், 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!