Sat. Jan 16th, 2021

இனி எங்கள் நாட்டிலிருந்துகொண்டே தாய்லாந்தை ஆட்சி செய்தால், தாய்லாந்து மன்னர் ஜேர்மனியை விட்டு வெளியேற்றப்படுவார் என ஜேர்மன் நாடாளுமன்றம் எச்சரித்துள்ளது.

தாய்லாந்து மன்னரான Maha Vajiralongkorn, தூதரக உறவை பயன்படுத்தி, ஜேர்மனியின் பவேரியாவில் உள்ள மாளிகையில் உல்லாச வாழ்வை அனுபவித்துவருகிறார், ஆனால், அவரை நாட்டிலிருந்து வெளியேற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது என கூறியுள்ளது.

தாய்லாந்து மன்னரான Maha Vajiralongkorn, அவரது நாட்டில் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளின் மத்தியிலும் ஜேர்மனியின் பவேரிய மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டிலும், ஹொட்டல் ஒன்றிலும் நீண்ட நாட்களாக கவர்ச்சியான இளம்பெண்கள் படை சூழ உல்லாசம் அனுபவித்துவந்தார். இதற்கு ஜேர்மனியின் பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவந்தன.

ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Heiko Maas, ஜேர்மனியிலிருந்துகொண்டே தாய்லாந்தை Vajiralongkorn ஆட்சி செய்வது குறித்து அவரை ஏற்கனவே எச்சரித்திருந்தார். அக்டோபரில் Vajiralongkorn தாய்லாந்துக்கு சென்றுள்ள நிலையில், வரை மீண்டும் ஜேர்மனிக்குள் அனுமதிக்க ஜேர்மன் அரசு தடை விதிக்கவேண்டும் என The Left கட்சி கோரியுள்ளது.

இவரைப் போன்று ஒரு ஜனநாயக இயக்கத்தை இராணுவத்தைக் கொண்டு நசுக்குபவர்கள் ஜேர்மனியில் சொகுசு வாழ்க்கை வாழ அனுமதிக்கும் வகையில் அவர்களுக்கு விசா வழங்கக்கூடாது என The Left கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான Sevim Dagdelen மர்றும் Heike Hänsel ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கோரியுள்ளனர்.

share

By admin

error: Alert: Content is protected !!