International
ஏனைய நாடுகள்

நியூ­ஸி­லாந்து – மசூ­தி­களில் துப்­பாக்­கிச் சூடு

நியூ­ஸி­லாந்­தின் இரண்டு மசூ­தி­க­ளில் நேற்று இனம் தெரி­யா­த­வர்­கள் துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­னர். நியூ­சி­லாந்­தின் கிழக்­குக் கட­லோர நக­ர­மான கிரைஸ்ட் சர்ச்­சி­லுள்ள இரு­வேறு மசூ­தி­க­ளில் நடந்த இந்­தத் தாக்­கு­தல்­க­ளில் 49 பேர் சாவ­டைந்­தி­ருப்­ப­தாக அந்த நாட்­டுத் தலைமை அமைச்­சர் ஜெசிந்தா அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­வித்­தார்.

கிரைஸ்ட் சர்ச்­சில் உள்ள அல் நூர் மசூதி மற்­றும் ஹக்லி எனும் பூங்­கா­வுக்கு அருகே உள்ள மசூ­திக்­குள் நேற்­றுப் புகுந்த நபர்­கள் கண்­மூ­டித்­த­ன­மா­கத் துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­னர்.

இதில் 49 பேர் சாவ­டைந்­தி­ருப்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இன்­னும் பலர் கொல்­லப்­பட்­டி­ருப்­பர் என்று அஞ்­சப்­ப­டு­கி­றது.

இன்­னும் எத்­தனை துப்­பாக்­கி­தா­ரி ­கள் உள்­ள­னர் என்­பது இறுதி செய்­யப்­ப­ட­வில்லை என்­றா­லும், துப்­பாக்கிதாரி­க­ளில் ஒரு­வர் ஆஸ்­தி­ரே­லி­யர் என்­ப­தும், அவர் குடி­ யேற்­றத்­துக்கு எதி­ரான கொள்­கையை கொண்­ட­வர் என்­றும் கூறப்­ப­டு­கி­ றது.

அத்தோடு, இந்­தத் துப்­பாக்­கித்­தாரி தாக்­கு­தல் தொடுக்­கும்­போது எடுத்­த­தா­கக் கூறப்­ப­டும் காணொலி ஒன்று சமூக வலைத்­த­ளங்­க­ளில் பரவி வரு­கி­றது. பங்­க­ளா­தே­சின் கிரிக்­கெட் அணி­யி­னர் ஹக்லி பூங்­கா­வுக்கு அருகே உள்ள மசூ­திக்­குத் தொழு­கைக்­குச் செல்ல முயன்­ற­போதே இந்­தத் தாக்­கு­தல் நடந்­தது.

அவர்­கள் அங்­கி­ருந்து அதிர்ஷ்­ட­வ­ச­மாக உயிர் தப்­பி­னார்­கள். நேற்­றைய தினம் வெள்­ளிக்­கி­ழமை என்­ப­தால், குறித்த மசூ­தி­யில் நண்­ப­க­லின் முஸ்­லிம்­கள் தொழு­கை­யில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்­த­னர். இதன்­போதே இந்­தச் சூட்­டுச் சம்­ப­வம் நடந்­தது.

இந்­தத் துப்­பாக்­கிச் சூடு 10 முதல் 15 நிமி­டங்­கள் வரை நீடித்­த­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 49 பேர் கொல்­லப்­பட்­டதாக முதல் கட்­டத் தக­வல் வெளி­யா­கி­யி­ருந்­தா­லும் இது மிகப்­பெ­ரிய தாக்­கு­த­லாக இருப்­ப­தால், சாவு­கள் அதி­க­ரிக்­கும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்­தச் சம்­ப­வத்­தால் அந்­தப் பகுதி முழு­தும் பதற்­ற­மான சூழல் நில­வு­வ­தால், பாட­சா­லை­கள், கல்­லூ­ரி­களை மூடு­மா­றும், யாரை­யும் வெளியே நட­மாட வேண்­டாம் என்று பொலி­ஸார் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

பங்­க­ளா­தேஷ் கிரிக்­கெட்
அணி­யி­னர் அருந்­தப்பு
இதற்­கி­டையே பங்­க­ளா­தேஷ் கிரிக்­கெட் அணி வீரர்­கள் ஹக்லி பூங்கா வுக்கு அருகிலுள்ள மசூ­திக்கு தொழு­கைக்­கா­கச் சென்­ற­னர்.
துப்­பாக்­கிச் சூடு குறித்து கேள்­விப்­பட்­ட­தும் அங்­கி­ருந்து வெளி­யேறி உயிர் தப்­பி­னார்­கள்.

இது குறித்துப் பங்­க­ளா­தேஷ் கிரிக்­கெட் அணி­யின் செய்­தித் தொடர்­பா­ளர் ஜலால் யூனுஸ் கூறு­கை­யில், ‘‘அனைத்­து வீரர்­க­ளும் மசூ­திக்­குள் தொழு­கைக்­குச் செல்­வ­தற்­கா­கச் சொகு­சுப் பேருந்­தில் மசூ­திக்கு வந்­தோம். மசூதி வளா­கத்­துக்­குள் கால் வைத்­த­தும் துப்­பாக்­கிச் சூடு நடந்­தது.

அங்­கி­ருந்து ஓடி உயிர் தப்­பி­னோம். யாருக்­கும் எந்­த­வி­த­மான காய­மும் ஏற்­ப­ட­வில்லை. வீரர்­கள் பாது­காப்­பாக இருக்­கி­றார்­கள். ஆனால், அதிர்ச்­சி­யில் உறைந்­துள்­ளார்­கள். அவர்­கள் தங்­கி­யுள்ள விடு­திக்­குப் பலத்த பாது­காப்பு போடப்­பட்­டுள்­ளது’’ எனத் தெரி­வித்­தார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!