International
ஏனைய நாடுகள்

நிலுவைத் தொகையைச் செலுத்துமாறு கோரும் அரசாங்க அச்சகம்

  • கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிட்டு வழங்கிய வகையில் இதுவரை தமக்குச் செலுத்தப்படாத நிலுவைத் தொகையான 12 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை உடனடியாகத் தமக்குச் செலுத்துமாறு அரசாங்க அச்சக உயரதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவைக் கோரியுள்ளனர்.
  • குறித்த நிலுவைத் தொகையை திறைசேரியின் தேர்தல்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் இருந்து பெற்றுக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்த போதிலும் குறித்த நிலுவைத் தொகையை நேரடியாகப் பணமாகச் செலுத்துமாறு அரசாங்க அச்சக உயரதிகாரிகள் கோரியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
  • குறித்த சேவையை வழங்கியமைக்காக தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே 22 கோடி ரூபாய்களுக்கு மேற்பட்ட தொகையை அரசாங்க அச்சகத்துக்குச் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக் காட்டியிருந்தது.
  • ஆயினும் அரசாங்க அச்சகத்தைத் தொடர்ந்து நிர்வகிக்க நிதிப்பற்றாக்குறை நிலவுவதாலேயே தமக்குச் செலுத்தப்பட வேண்டிய நிலுவைத் தொகையை அவசரமாகச் செலுத்துமாறு தாம் கோரியுள்ளதாக அரசாங்க அச்சகர் தெரிவித்துள்ளார்.
  • இதனிடையே ஜனாதிபதித் தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு குறித்த பயணிக்காக வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவான 40 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை இதுவரை தேர்தல்கள் திணைக்களத்தால் அவர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்காதீப்
11.02.2020

வீ.எஸ்.ரி

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!