International
ஏனைய நாடுகள்

படுகொலையான ரஜித்தின் தாய் மரணம் – கூட்டமைப்பு இரங்கல்!

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான மனோகரன் ரஜித்தின் தாயாரின் மறைவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நேற்று (14) வெளியிட்ட அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளனர். அதில் மேலும்,

பதின்நான்கு வருடங்களிற்கு முன் திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலையில் மரணித்த மாணவன் மனோகரன் ரஜித் அவர்களின் தாயார் திருமதி மனோகரனின் அகாலச் செய்தி குறித்து நாம் ஆழ்ந்த கவலையடைகிறோம்.

தம் சொந்தங்களிற்கு நடந்த அநீதிகளிற்கு நீண்ட கால போராட்டங்களின் பின்னும் நீதியை காணாமல் இயற்க்கை எய்திய எம்மக்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்வது மிகுந்த மனவேதனையை தருகின்றது. தனது மகனின் படுகொலைக்கு நீதி நிலைநாட்டப்படுவதனை கண்டுகொள்ளாமல் திருமதி மனோகரன் அவர்கள் மரணித்தமை ஆழ்ந்த துயரத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இழப்பினால் துயருற்றுள்ள வைத்தியர் மனோகரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் – என்றுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!