International
ஏனைய நாடுகள்

பலியெடுப்பு தொடர்கிறது; இதுவரை 81 ஆயிரம் பேர் மரணம்!

சீனாவின் – வுஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் இப்போது இத்தாலி, ஸ்பைன் மற்றும் அமெரிக்கா எங்கும் உச்சம் தொட்டு உலக நாடுகள் அச்சுறுத்தி வருகின்றது.

இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக இன்று (08) அதிகாலை வரை 209 நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் இரு கப்பல்கள் அடங்கலாக (இளவரசி மற்றும் எம்எஸ் ஷான்டம் கப்பல்) உலக நாடுகளில் 81,048 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இந்த கொரோனா தாக்கம் காரணமாக இதுவரை 1,411,332 பாதிக்கப்பட்ட நிலையில் அவர்ளில் 300,759 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது வரை 1,029,525 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை உலகளவில் நேற்று (07) மட்டும் 6,394 பேர் பலியாகியுள்ளனர். இதில் பிரான்ஸில் 1,417 பேரும் அமெரிக்காவில் 1,403 பேரும், பிரித்தானியாவில் 786 பேரும் பலியாகியுள்ளனர்.

இதன்படி மொத்தமாக அதிக உயிரிழப்புக்கை சந்தித்த நாடுகளாக,

  • இத்தாலி > 17,127
  • ஸ்பெயின் > 13,897
  • அமெரிக்கா > 12,274
  • பிரான்ஸ் > 10,328
  • பிரித்தானியா > 6,159
  • ஈரான் > 3,872
  • சீனா > 3,331
  • நெதர்லாந்து > 2,101

காணப்படுகின்றன.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!