International
ஏனைய நாடுகள்

பாதாள உலகக்குழு தலைவரின் உறவினர் கைது!

பாதாள உலகக் குழுவின் தலைவரான வெல்லே சுரங்கவின் உறவினர் ஒருவர் கொழும்பு – மட்டக்குளி பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரிடமிருந்து 250 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்நபர் மட்டக்குளி பகுதியில் உள்ள சிலரிடம் கப்பம் பெற்று வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்குளி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!