International
ஏனைய நாடுகள்

பிரித்தானிய உளவுத்துறை வெளியிட்ட பகீர் தகவல்!

சிரியாவில் அகதி முகாமில் வசித்து வரும் ஷமீமா, தற்கொலை படை தாக்குதலுக்கு பயன்படுத்தும் ஆடைகளை தயாரித்ததாக பிரித்தானிய உளவுத்துறையினர் பிரதமர் தெரசா மே-க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் இருந்து 15 வயதில் தப்பி சென்ற ஷமீமா பேகம் (19), சிரியாவில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வருகிறார்.

சமீப காலமாகவே அவர் பிரித்தானியாவிற்கு வர விருப்பம் தெரிவித்து வந்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு, குடியுரிமையை ரத்து செய்து உள்துறை செயலாளர் சாஜித் ஜாவித் நடவடிக்கை மேற்கொண்டார்.

இதற்கிடையில் அவருக்கு பிறந்த 3வது குழந்தையும் உயிரிழந்தது. தான் சிரியாவில் இருந்த சமயத்தில் வெறும் மனைவியாக மட்டுமே இருந்தேன்.

ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை. எந்த பயங்கரவாத செயல்களுக்கும் உடந்தையாக இருந்ததில்லை என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பிரித்தானிய உளவுத்துறையில் வேலை செய்துவரும் மூத்த அதிகாரி ஒருவர் பகீர் தகவலை பத்திரிகை ஒன்றின் வாயிலாக வெளியிட்டுள்ளார்.

ஷமீமா சிரியாவில் இருந்த சமயத்தில், தற்கொலை படையினர் உடுத்தும் வெடிகுண்டுகளுடன் சேர்ந்த பெல்ட் தயாரிக்க உதவியிருக்கிறார். அந்த குண்டுகள் வெடிக்காமல் அவற்றை அகற்ற முடியாத அளவிற்கு ஷமீமா தைத்து கொடுத்து வந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து பிரதமர் தெரசா மே மற்றும் உள்துறை செயலாளர் சாஜித் ஜாவித் ஆகியோருக்கும் தகவல் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.


Post Views:
53

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!