International
ஏனைய நாடுகள்

பிரிந்தவர்கள் மீள கூட்டமைப்புக்குள் வர வேண்டும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை குலைந்து அதன் பலம் குறைவடைவதால் ஏற்படும் பாதிப்புக்களை உணர்ந்து, கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய அனைவரும் மீண்டும் கூட்டமைப்புக்குள் வர வேண்டும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்க் கட்சிகளின் பிளவுகள் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,

கூட்டமைப்புக்குள் இருந்து, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகிய இருவர் மட்டுமல்லாது, டெலோ அமைப்பின் முன்னாள் செயலாளர் சிறிகாந்தா என பலரும் வெளியேறியுள்ளனர். இது நிச்சயமாக நாடாளுமன்றத் தேர்தலின் போது, கூட்டமைப்புக் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அப்படி ஒரு தாக்கம் நடந்துவிடக்கூடாது. முக்கியமாக கடும்போக்காக உள்ள அரசாங்கத்தில் தமிழ் மக்களின் ஒற்றுமை சீர்குலையுமாக இருந்தால், அது அரசாங்கத்துக்கு இன்னும் வசதியாக இருக்கும் – என்றார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!