International
ஏனைய நாடுகள்

போதைப்பொருள் கடத்த முயற்சி – நால்வர் கைது

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெலுங்கான மாநிலத்தின் மகபூப்நகரில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் இன்று (24 ) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து இந்திய நாணய மதிப்பில் 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான 180 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மதுரையைச் சேர்ந்த பி.சதீஷ். ஹைதராபாத்தைச் சேர்ந்த கே.கல்யாண், தமிழ் நாட்டின் தேனியைச் சேர்ந்த எம்.அஜித், சந்திரயங்குட்டாவைச் சேர்ந்த ஜி.சுரேந்திரன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த கடத்தலுடன் தொடர்புடைய சிவேனேஸ்வரன், ராமு, மூர்த்தி மற்றும் ராம் ரெட்டி ஆகியோரையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!