International
ஏனைய நாடுகள்

போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைது

போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் திருகோணமலையில் உள்ள பேக் பே பகுதியில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீனவர் வேடமணிந்து இருந்த போதைப்பொருள் கடத்தல்காரரை, பேக்பே பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த கடற்படை விசாரித்துள்ளது.

விசாரணையின் மூலம் குறித்த நபர் திருகோணமலை பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரராக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் திருகோணமலை பகுதியில் வசிக்கும் 21 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் அவர் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!