International
ஏனைய நாடுகள்

மதீனா அரபுக் கல்லூரியின் முப்பெரும் விழா!

மட்டக்களப்பு – ஏறாவூர் பைஸானுல் மதீனா அரபுக் கல்லூரியின் முப்பெரும் விழா சிறப்பாக இன்று (16) நடைபெற்றது.

ஆலிம்கள், ஹாபிழ்கள் கௌரவிப்பு மற்றும் 8வது தலைப்பாகை சூடுதல் ஆகிய நிகழ்வுகள் இதன்போது நடைபெற்றன.

அரபுக்கல்லூரியின் அதிபர் மௌலவி பீஎம்ஏ.ஜலீல் பாகவி தலைமையில் மௌலவி அப்துல் றஹீம் நூரி முன்னிலையில் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் அஸ்ஸெய்யித் மௌலானா மௌலவி எஸ்எம். மஸ்ஹர் தங்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இவ்விழாவில் இராணுவ லெப்டிலன்ட் கேணல் தாவூத் அனஸ் அஹமட், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.டபிளியு.கே.ஜயன்த மற்றும் நலன்விரும்பிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி எம்எம். அன்வர் பாஸில் ஸக்காபி இங்கு சிறப்புரையாற்றினார். சுங்காவில் முகம்மது றினாஸ், அக்கரைப்பற்று முகம்மது அஸ்கர் மற்றும் பஹீமுல் ஹஸன் ஆகியோர் ஆலிம்களாக கௌரவிக்கப்பட்டனர்.

சுங்காவில் முகம்மது நஸ்கர், ஏறாவூர் முகம்மது நஜாத் மற்றும் முகம்மது ஜஸார் ஆகியோருக்கு இம்முறை தலைப்பாகை சூடப்பட்டது. கண்டி முகம்மது ஸாதிக் மற்றும் மூதூர் முகம்மது அஸாம் ஆகிய ஹாபிழ்கள் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.

விழா அதிதிகளும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். இந்த அரபுக்கல்லூரி கடந்த பதினெட்டு வருடகாலமாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (150)

Most Popular

To Top
error: Alert: Content is protected !!