International
ஏனைய நாடுகள்

மத்தள விமான நிலையத்தில் புதிய மாற்றம் ?

மத்தள விமான நிலையத்தை சர்வதேச விமானங்கள் வருகை தரும் விமான நிலையமாக மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இதற்காக குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இந்த வேலைத் திட்டத்திற்கு உரிய பிரிவினரின் ஒத்துழைப்பை பெறுவது தொடர்பில் சகல விமான நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச விமான நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாக சந்திர ஸ்ரீ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!