International
ஏனைய நாடுகள்

யாழில் குடும்பமாக தற்கொலை முயற்சி; இருவர் பலி!

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மட்டுவில், சந்திரபுரம் வடக்கு செல்ல பிள்ளையார் கோவிலடி பகுதியில் இன்று (20) மாலை இடம்பெற்ற குடும்பமொன்றின் தற்கொலை முயற்சியின் போது தாய் ஒருவர் பலியாகியுள்ளார்.

அத்துடன் மகள் மற்றும் மருமகன் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தில் தாய், அவரது மகள், மகளின் கணவன் ஆகியோர் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சி நிலையிலேயே தாயார் பலியாகியுள்ளனர். ஏனைய இருவரும் இருவரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் நவரத்தினம் விமலேஸ்வரி (65) என்பவரே உயிரிழந்துள்ளார் அவரது மகள் சிலக்சன் கீர்த்திகா (35), அவரது கணவர் சிவபாலன் சிவலக்சன் (35) ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிக வட்டிக்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையிலேயே இந்த தற்கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!