International
ஏனைய நாடுகள்

வவுனியாவிலும் நினைவேந்தல்; குறுக்கிட்டு குழப்பிய பொலிஸ்

வவுனியா நகரசபையில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபியில் இன்று (18) காலை 10.30 மணிக்கு நகர சபையின் தவிசாளர் ஆர்.கௌதமன் தலைமையில் 11ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இறுதிப் போரின் போது உயிர்நீத்த உறவுகளுக்காக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து உறவுகளின் ஆத்ம சாந்திக்காக மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு அஞ்சலி உரை இடம்பெறவிருந்த சமயத்தில் நிகழ்வு இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் நிகழ்வினை தலைமையேற்று நடத்திய நகரசபை தவிசாளரை அழைத்து எச்சரித்தனர்.

இவ்வாறான நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, உடனடியாக இதனை நிறுத்துங்கள் என்று பொலிஸார் நகரசபை தவிசாளரை எச்சரித்தனர். இதனையடுத்து மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன் நிகழ்வுகள் நிறுத்தப்பட்டது.

Most Popular

To Top
error: Alert: Content is protected !!