International
ஏனைய நாடுகள்

வவுனியாவில் பேருந்து விபத்து – பலர் படுகாயம்

வவுனியா செட்டிக்குளம் நேரியகுளம் பகுதியில் இன்று (12) காலை 7.30 மணியளவில் பயணிகள் பேருந்துகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

செட்டிகுளத்தில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற வவுனியா சாலைக்கு சொந்தமான அரச பேருந்தும், நேரியகுளம் சந்தியில் சென்றுகொண்டிருந்தபோது கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் அரச பேருந்து தூக்கி வீசப்பட்டதுடன், அதில் பயணித்த பலர் காயமடைந்த நிலையில் செட்டிகுளம் மற்றும் வவுனியா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Most Popular

To Top
error: Alert: Content is protected !!