International
ஏனைய நாடுகள்

வவுனியாவில் மின்னியலாளர்களுக்கு தொழில்துறை உரிமம் குறித்த விழிப்புணர்வு

வவுனியா மாவட்ட மின்னியலாளர்களுக்கான தொழில்துறை உரிமை (License) குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று (03) இடம்பெற்றது.

வவுனியா மாவட்டத்தில் உள்ள 800 க்கு மேற்பட்ட மின்னியலாளர்களுக்கும் உரிமம் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக இந்த செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம். சமன் பந்துலசேன தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மின்னியலாளர்களுக்கான உரிமம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தினை நிர்மாண கைத்தொழில் அதிகார சபையுடன் இணைந்து பல அரச நிறுவனங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து இச் செயற்பாட்டினை முன்னெடுத்து மின்னியலாளர்களின் தராதரத்தினை உயர்த்தி அவர்களுக்கு உள்ள அங்கீகாரத்தினை விளக்குவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேரடியாக ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!