International
ஏனைய நாடுகள்

வவுனியா அபிவிருத்தி குழு கூட்டம்

வவுனியா பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (13) இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் தர்மபால செனவிரத்தின தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், பிரதேசத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற நிலைமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.கே.மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாஸ், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள், அரச உயரதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், பொலிஸார் உட்பட கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!