International
ஏனைய நாடுகள்

வவுனியா விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

வவுனியா- பன்றிக்கெய்த குளம் பகுதியில் நேற்று (23) இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த ஐவரில், நால்வர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, காரைநகரைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வர வர்த்தகரான பார் சோமர் என்று அழைக்கப்படும் ராமலிங்கம் சோமசுந்தரம் (வயது 83), ஆறுமுகம் தேவராஜா (வயது 62), தேவராஜா சுகந்தினி (வயது 51), தேவராஜா சுதர்சன் (வயது 30) மற்றும் அத்தோடு அவர்கள் பயணித்த வாகனத்தை செலுத்திச் சென்ற சாரதியான விஜயகுமார் ரொசாந்தன் (வயது 24) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் சோமசுந்தரம் லக்சனா (வயது 29) என்பவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!