International
ஏனைய நாடுகள்

விடுமுறை காலத்தில் மாணவர்களுக்கு இணையத்தள கல்வி வசதி

தற்போது நடைமுறையில் உள்ள பாடசாலை விடுமுறைகாலத்தில் பிள்ளைகளுக்கு எந்தவொரு தொலைபேசி வலையமைப்பின் ஊடாகவும் கட்டணமின்றி e-தக்சலாவ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதற்கான வசதியை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது. 

கல்வி அமைச்சு தொலைதொடர்பு ஒழுங்குறுத்தில ஆணைக்குழுவுக்கு விடுத்த வேண்டுதலுக்கிணங்க சகல தொலைபேசி நிறுவனங்களின் ஒப்புதலின் அடிப்படையில் இந்த வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

www.e-thaksalawa.moe.gov.lk/ (IP 43.224.124.108) ஊடாக e தக்சலாவ கற்றல் முகாமைத்துவ முறைமைக்குள் பிரவேசிப்பதற்கு மார்ச் 23 முதல் வாய்ப்புகள் கிட்டும். ந தக்சலாவில் பிரவேசிக்கும் அனைத்து பாடசாலை சிறார்களுக்கு பாட செயற்பாடுகள், வினாத்தாள்கள் மற்றும் பாடநூல் தொடர்பான பயிற்சிகள் உட்பட கற்றல் செயற்பாடுகளுக்கு வழிகாட்டியாக அதிகமான பாடதிட்டங்களுடன் ஒன்றிணைவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். 

சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலமாக  முதலாம் வகுப்பு தொடக்கம் 5 ஆம் வகுப்பு வரைக்கும் 6 வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரைக்குமான பாடப்பரப்புகளும் செயற்பாட்டு பயிற்சிகளும் வினாத்தாள்களும் உட்சேர்க்கப்பட்டுள்ளன.ஆங்கில மொழிக்குமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

The post விடுமுறை காலத்தில் மாணவர்களுக்கு இணையத்தள கல்வி வசதி appeared first on NewUthayan.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!