International
ஏனைய நாடுகள்

விபத்தில் காயமடைந்த நிமாலி -அரிய வாய்ப்பு பறிபோனது

கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நிமாலி லியனாராச்சி தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்துள்ளார்.

நாளை மறுதினம் (01) தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டித் தொடரில் 800, 1500, 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் நிமாலி கலந்து கொள்ளவிருந்தார்.

இதற்காக நேற்று காலை பயிற்சியில் ஈடுபட தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நிலையில் நிமாலி விபத்தில் சிக்கியுள்ளார். விபத்தில் அவரது கை பலமாக அடிபட்டுள்ளது. இதனால் அவருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு பறிபோயுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!