International
ஏனைய நாடுகள்

வெளியாக முன்னரே கோடிகளை அள்ளிய மாஸ்டர் உரிமம்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஹீரோவாக நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் வியாபார உரிமம் வெளியாகியுள்ளது.

இந்த படம் ‘பிகில்’ படத்தின் வியாபாரத்தை விட அதிகமாகியுள்ளதாக விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள். 
அதன் படி, 

  1. தமிழ்நாட்டு உரிமை ரூ.80 கோடி
  2. வெளிநாட்டு உரிமை ரூ.30 கோடி
  3. தெலுங்கு உரிமை ரூ.10 கோடி
  4. கேரளா உரிமை ரூ.9 கோடி
  5. கர்நாடகா உரிமை ரூ.10 கோடி, 
  6. ஹிந்தி & சாட்டிலைட் & டிஜிட்டல் உரிமை ரூ.25 கோடி
  7. தமிழ் சாட்டிலைட் உரிமை ரூ.30 கோடி
  8. தமிழ் டிஜிட்டல் உரிமை ரூ.20 கோடி
  9. ஆடியோ உரிமை ரூ.5 கோடி 

என இதுவரை மொத்தம் ரூ.219 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெற்றிருக்கிறது என்கிறார்கள். 
படத்தின் பட்ஜெட் சுமார் 150 கோடி. எனவே, வெளியீட்டிற்கு முன்பாகவே சுமார் 70 கோடி வரை லாபத்தைப் பார்த்துள்ளார் நடிகர் விஜய்யின் உறவினரும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ.
விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் வியாபாரம் ‘தர்பார்’ வியாபாரத்தை விடவும் அதிகமாக நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!