International
ஏனைய நாடுகள்

06வது தடவையாக குளோப் விருது – கிறிஸ்டியானோ ரொனால்டோ

சிறந்த கால்பந்து வீரருக்கான குளோப் விருதை போர்த்துக்கல் மற்றும் ஜுவண்டஸ் அணிகளின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றுள்ளார்.

2019ஆம் ஆண்டுக்கான குளோப் விருது வழங்கும் நிகழ்வு டுபாயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்றது. தொடர்ச்சியாக ஆறாவது முறையாக ரொனால்டோ குளோப் விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.

ஐரோப்பிய கழக கால்பந்து சங்கம் (இ.சி.ஏ) மற்றும் ஐரோப்பிய கால்பந்து வீரர்களின் முகவர்கள் சங்கம் (இ.எப்.ஏ.ஏ) சார்பில் கழக மட்ட கால்பந்து போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு குளோபல் விருது வழங்கப்படும்.இதற்குமுன் 2011, 2014, 2016, 2017, 2018 ஆகிய வருடங்களில் அவர் இந்த விருதை தனதாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் சிறந்த வீரருக்கான விருதை போர்த்துக்கல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ கைப்பற்றினார். இவர் ஆர்ஜென்டீனாவின் மெஸ்ஸி (பார்சிலோனா), நெதர்லாந்தின் வெர்ஜில் வான் டிஜிக் (லிவர்பூல்) ஆகியோரை பின்தள்ளி 6ஆவது முறையாக இந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!