International
ஏனைய நாடுகள்

124 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட 124 மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

கருகம்பனை இந்து இளைஞர் கழகம் மற்றும் சித்திரமேழி பழனியானந்தன் சனசமூகநிலையம் ஆகியன இணைந்து நடத்தும் வன்னி மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் விதையனைத்தும் விருட்சமே என்கின்ற செயற்றிட்டத்தின் ஊடாக அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பு ஒன்றினை செயற்படுத்தி அதன்மூலம் சேகரிக்கப்பட்ட பணத்தின் ஊடாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 124 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களே அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!