International
ஏனைய நாடுகள்

76 நாட்களின் பின்னர் மீண்டது வுஹான் நகரம்

கொரோனா (கொவிட்-19) வைரஸின் பிறப்பிடமான சீனாவின் வுஹான் நகரம் கடந்த 76 நாட்களாக முடக்கப்பட்டிருந்த நிலையில் வெளிச் செல்லும் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இன்று (07) நகரின் நுழைவாயில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இன்று (07) வரை கொரோனா வைரஸினால் 81,740 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 77,167 குணமடைந்தனர்.

அத்துடன் 3,331 பேர் பலியாகியிருந்தனர். இப்போது 1,242 பேர் மட்டுமே கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top
error: Alert: Content is protected !!