International
கனடா

அமெரிக்கா – கனடா நஃப்டா பேச்சுவார்த்தை உடன்பாடின்றி நிறைவு

அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இந்த வாரத்திற்கான பேச்சுவார்த்தை உடன்பாடின்றி நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், உடன்பாடொன்றை எட்டும் வகையில் கனேடிய தரப்புடன் மீண்டும் அடுத்தவாரம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trump-0908நஃப்டா உடன்படிக்கை தொடர்பாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி றொபர்ட் வைஹைசருக்கும், கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலண்டிற்கும் தொடர்ந்து நான்காவது நாளாக நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பேச்சுவார்த்தையே இவ்வாறு தோல்வியில் நிறைவடைந்துள்ளது.

இதுவரை மெக்ஸிகோவுடனான உடன்பாட்டுடன் முன்னோக்கி செல்வதற்கே அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தினை முன்னெடுக்கும் அமெரிக்கா-மெக்சிகோ நாடுகள் மாத்திரம் ஒன்று சேர்ந்து இருதரப்பு வர்த்தகத்தினை மேற்கொள்ளத் தீர்மானித்த நிலையில், நஃப்டாவில் அங்கம் வகிக்கும் மூன்றாம் நாடான கனடாவினை இணைக்கும் வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளும் வகையிலேயே இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!