International
கனடா

மிசிசாகுவா நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒன்ராறியோவில் மிசிசாகுவா நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பேருந்தொன்றை விரட்டிச்சென்று ஏறுவதற்கு முற்பட்ட வேளையில் நேற்று (புதன்கிழமை) இவ்விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தை பலரும் நேரில் கண்டிருந்த போதிலும், குறித்த நபர் வீதியை கடக்கும்போது பச்சை சமிக்ஞை ஒளிர்ந்ததா என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!