Tue. Nov 24th, 2020

சுவிட்சர்லாந்தில் 12 வயது சிறுமியை சோள வயக்காட்டில் இழுத்துச் சென்று சீரழித்த நபருக்கு 30 மாதங்கள் நிபந்தனையற்ற தண்டனை வழங்க அரசு தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நாட்டை உலுக்கிய இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாடசாலையில் இருந்து தனியாக குடியிருப்புக்கு திரும்பிய 12 வயது சிறுமியை தற்போது 59 வயதாகும் நபர் தமது இருச்சக்கர வாகனத்தில் துரத்திச் சென்று சிக்க வைத்துள்ளார்.

பின்னர் அருகாமையில் உள்ள சோள வயக்காட்டில் இழுத்துச் சென்று சிறுமியின் எதிர்ப்பையும் மீறி அவரை கொடூரமாக துன்புறுத்தி பின்னர் சீரழித்துள்ளார்.

சிறுமி அலறிய சத்தம் கேட்டும் வழிபோக்கர் ஒருவர் கண்டுகொள்ளாமல் சென்றதாக பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தெரியவந்தது.

சிறுமியை அந்த நபர் பல நாட்களாக நோட்டம் விட்டிருந்துள்ளார். மட்டுமின்றி அந்த நபர் எப்போதும் மேல்சட்டை அணியாமலையே காணப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்து சில மணி நேரத்திலேயே பொலிசாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது குடியிருப்பை சோதனையிட்ட பொலிசார், ஆபாச காட்சி தொகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மீட்டுள்ளனர்.

மேலும், தமது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க மறுத்த அவர், நடந்தது தற்செயலான விபத்து எனவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

2017 ஆகஸ்டு மாதம் நடந்த அச்சம்பவம் தொடர்பாக 2018 டிசம்பர் மாதமே குறித்த நபர் குற்றவாளி என விசாரணை அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டது.

தற்போது விசாரணை முடிவடைந்த நிலையில், அவருக்கு 30 மாதங்கள் நிபந்தனையற்ற தண்டனை வழங்கவும், 10 ஆண்டுகள் சமூக செயற்பாட்டில் இருந்து தடை செய்யவும் அரசு தரப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.

பெர்ன் நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பில் எதிர்வரும் 24 ஆம் திகதி இறுதி தீர்ப்பை வழங்க முடிவு செய்துள்ளது.

share

By admin

error: Alert: Content is protected !!