Tue. Nov 24th, 2020

சுவிட்சர்லாந்தில் 6 வயது மகனை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய தந்தையை தண்டனை காலத்திற்கு பின்னர் நாட்டைவிட்டு வெளியேற்ற பாஸல் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈராக்கிய நாட்டவரான 34 வயது நபர் தமது 6 வயது மகனை பாலியல் துன்புறுத்தலுக்கு இரையாக்கியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையில், ஏற்கெனவே கடந்த 2018 ஆம் ஆண்டு சிறார் பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் சிக்கி நிபந்தனைகளுடன் 12 மாத தண்டனை பெற்ற இவர்,

தற்போது மீண்டும் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிக்கியுள்ளதால், அவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும், தண்டனை காலம் முடிவடைந்த பின்னர் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் உளவியல் தொடர்பான பிரச்னையால் நீண்ட சில ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்து வருகிறார்.

தனியாக குடியிருப்பு ஒன்றில் வசித்துவரும் அவர், தமது மகனை மட்டுமே காண அனுமதித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதம் தமது தந்தையுடன் குறித்த 6 வயது சிறுவன், தாயாரின் குடியிருப்புக்கு சென்றுள்ளான்.

இந்த வேளையிலேயே சிறுவனை பாலியல் துன்புறுத்தலுக்கு குறித்த தந்தை இரையாக்கியதாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சிறுவன் தமது பிள்ளை எனவும், இது சூழ்ச்சி எனவும், இந்த விவகாரத்தில் தாம் 4 மாதம் சிறை தண்டனை அனுபவித்ததாகவும், தமக்கு இழப்பீட்டு வழங்க வேண்டும் எனவும் அவர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

ஈராக்கியரான இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு சுவிஸில் அகதியாக குடிபெயர்ந்துள்ளார்.

இவரது புகலிட கோரிக்கையானது நிராகரிக்கப்பட்ட நிலையில், இறுதியில் தற்காலிக சேர்க்கை அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

share

By admin

error: Alert: Content is protected !!