International
பிரான்ஸ்

அசிட்டில் கருகிய இருவர்! – மெற்றோவுக்குள் சம்பவம்!!

நேற்று புதன்கிழமை மாலை பரிசில், 11 ஆம் இலக்க மெற்றோவுக்குள் இரு நபர்கள் அசிட் எரிவுக்குள் சிக்கியுள்ளனர்.

நேற்று புதன்கிழமை 17:30 மணி அளவில் பரிசில் Place des Fêtes நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நிலையத்தில் 11 ஆம் இலக்க மெற்றோவில்  ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் ஏறி இருகையில் அமர்ந்துகொண்டனர். அதன் பின்னர் சில நிமிடங்கள் கழித்து, தம் இருக்கையில் ஈரமாக எதோ ஒரு பொருள் இருப்பதை உணர்ந்து துரிதமாக எழுந்துள்ளனர். இருக்கையில் சிறிய போத்தல் ஒன்றில் அசிட் நிரப்பப்பட்டு இருக்கையில் கிடந்துள்ளது. அதற்குள்ளாக போத்தலில் இருந்து வெளியேறிய அசிட், இருவரையும் பதம் பார்த்துள்ளது. குறித்த பெண்ணுக்கு இரண்டு தொடைகளிலும் அசிட் பட்டு, எரிந்துள்ளன. மற்றைய ஆணுக்கு புறங்கையில் அசிட் பட்டு எரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த பதற்றத்துக்குள்ளாக தொடரூந்து Châtelet நிலையத்தை வந்தடைந்துள்ளது. RATP ஊழியர்கள் தலையிட்டு நிலமையை சரி செய்தனர். குறித்த இருவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

பரிசோதனைகளுக்காக அசிட் உபரி எடுக்கப்பட்டது. பின்னர் அது கந்தக அமிலம் என தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!